• Jan 18 2025

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயிலுக்கு முத்தம் கொடுத்த நபர் யார்? இதை ஏன் அவர் சொல்லவே இல்லை?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடித்து வரும் சரண்யா தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் பலர் ஆச்சரியம் அடைந்து ’உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா’ ’எப்போது திருமணம் ஆனது’ ’சொல்லவே இல்லையே’ என்பது போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த சரண்யா அதன் பின்னர் பல சீரியல்களில் நடித்தார். குறிப்பாக விஜய் டிவியில் ’நெஞ்சம் மறப்பதில்லை’ சன் டிவியில் ’ரன்’ போன்ற சீரியல்களில் நடித்தவர் தற்போது ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் சரவணன் மனைவி தங்கமயில் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இவரது கேரக்டர் உள்ளே வந்த பிறகுதான் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும் வகையில் காட்சிகள் சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சரண்யாவுக்கு ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது அவர் தனது புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் சற்றுமுன் அவர் ’எனது அன்புள்ள கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்து கணவர் தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி ஆகியுள்ளனர். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? திருமணம் ஆனதை சொல்லவே இல்லையே? உங்கள் கணவர் யார்? ஒரு வழியாக திருமணமானதை வெளியிட்டு விட்டீர்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement