தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக திகழும் நாக சைதன்யா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் தண்டேல். இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றது.
நாக சைதன்யாவின் பான் இந்திய கனவோடு வெளியான திரைப்படம் தான் தண்டேல். இந்த படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றாலும் தமிழ், மலையாளம், இந்தி போன்ற பிற மொழிகளில் வரவேற்பை பெற தவறி உள்ளது. இதனால் இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு எட்டவில்லை.
d_i_a
தண்டேல் படத்திற்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவிலும் பட ப்ரமோஷன்கள் நடைபெற்றது. இதற்காக பெரிய பட்ஜெட் அளவில் செலவு செய்யப்பட்டது. எனினும் இதற்கான பலன் கிடைக்கவில்லை என வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த படம் முதல் நாளிலேயே 15 லட்சம் தான் வசூலித்ததாகவும் தமிழ் சினிமா மற்றும் மலையாளத்திலும் சில லட்சங்கள் தான் வசூலித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரம் வெளியான தண்டேல் திரைப்படம் மூன்று நாட்களில் 62. 37 கோடிகளுக்கு மேல் உலக அளவில் வசூலித்ததாக இதன் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் அந்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை என சமூக வலைதள பக்கங்களில் சிலர் விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
எனவே இந்த படத்திற்கு தெலுங்கு மொழியில் மட்டும் தான் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ஏனைய மொழிகளில் தோல்வியை தழுவி உள்ளதாகவும் இதனால் தெலுங்கு ஹீரோ என்பதை நாக சைதன்யா நிரூபித்திருந்தாலும் பான் இந்தியா ஸ்டார் ஆக வேண்டும் என்ற அவருடைய கனவில் மண் விழுந்துள்ளதாகவும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!