விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.
சாமியார் கெட்டப்பில் வந்த ஈஸ்வரியைப் பார்த்த ராமமூர்த்தி ஜெனி இவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அத்தோடு ஈஸ்வரி கடவுளில் பெயரை உச்சரித்துக் கொண்டு இருப்பதோடு அவரது பேச்சும் வித்தியாசமாக இருக்கின்றது. இருந்தாலும் இருவரும் ஈஸ்வரியை வீட்டுக்குள்ளே அழைத்துச் செல்கின்றனர். வீட்டிற்குள் வந்த ஈஸ்வரியை அமிர்தாவும் பார்த்து அதிர்ச்சியடைகின்றார்.
தொடர்ந்து பாக்கியா காலேஜில் தனது கிளாஸ் ரூமுக்குள் செல்கின்றார். அங்கு எல்லோரும் பாக்கியாவை வித்தியாசமாகப் பார்க்க பாக்கியா எதையும் கண்டு கொள்ளாமல் போய் இருக்கின்றார்.அத்தோடு மிஸ் வந்ததும் எல்லோருடனும் சேர்ந்து தன்னையும் அறிமுகம் செய்து கொள்கின்றார்.
மறுபுறம் காண்டீனில் சாப்பிட வரும் ராதிகா தனக்கு தோசை வேண்டும் என்று கேட்க செல்வி தோசையை கொண்டு வரப் போகும் போது அவருடன் வேலை செய்பவர் காஃஸ் தீர்ந்து போச்சு என்று சொல்ல செல்வி அவரைத் திட்டி விட்டு பின்னர் கொஞ்சம் லேட்டாக தோசையை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கின்றார்.
இதனால் கோபமான ராதிகா ஆடர் பண்ணி 15 நிமிஷம் ஆச்சு. எங்க உங்க மேடம் பாக்கியா என்று கேட்க செல்வி ஓனர் வெளில போய்ட்டாங்க மேடம் என்று சொல்ல ராதிகா கான்ராக்ட் கிடைக்கும் மட்டும் அதை செய்வேன் இதை செய்வேன் என்று சொல்ல வேண்டியது கான்ட்லாக்ட் கிடைத்தவுடன் ஓனர் ஆகிட்டாங்களா என்று திட்டுகின்றார்.
பின்னர் பாக்கியா, பிரேக் விட்டதும் தனது கிளாசில் இருக்கும் எல்லோரிடமும் பேசிவிட்டு வெளியில் வருகின்றார். பாக்கியாவைப் பார்ப்பதற்காக பழனிச்சாமி தன்னுடைய அம்மாவுடன் வந்து நிற்கின்றார்.இதனால் பாக்கியா அவர்கள் இருவரிடமும் பேசிக் கொண்டு இருக்கின்றார்.
பின்னர் வீட்டில் ஈஸ்வரியின் நடவடிக்கைகளைப் பற்றி எழிலும் இனியாவும் பேசிட்டு இருக்கின்றனர். அப்போது எழில் அம்மா வந்தாங்க என்றால் பாட்டியைப் பார்த்து அதிர்ச்சியடையப் போறாங்க என்று சொல்ல இனியா, பாடடிக்கு தான் அம்மா காலேஜ் போறது தெரியாதே என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். இததுடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.
Listen News!