• Sep 27 2023

நடிகர் விஜய் தனது தந்தை மீது இவ்வளவு பாசம் கொண்டவரா?- உண்மையை உடைத்த பிரபல இயக்குநர்

stella / 1 month ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் விஜய் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிவருவதுண்டு. அதிலும் குறிப்பாக அவர் தனது தந்தை  எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சரியாக பேசுவதில்லை என்றும் தந்தையை கவனித்துக்கொள்வதில்லை என ஒரு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில்  ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதாவது எஸ்ஏசியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய போது, காலையில் சரியாக 7 மணிக்கு படப்பிடிப்பை தொடங்கிவிடுவார். இரவு வரை அடுத்தடுத்து சலிக்காமல் எடுத்துக்கொண்டே இருப்பார். எஸ்ஏசி இயக்கிய சுக்ரன் படத்தில் விஜய் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லை.


ஆனால் அவரின் தந்தை கூறியதால் மட்டுமே நடித்துக்கொடுத்தார். சுக்ரன் பட வெளியாகவுள்ள சமயத்தில், காலையில் இருந்து, இரவு வரை வேலை இருந்துகொண்டே இருந்தது. ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்தோம். இதை கவனதித் விஜய், எஸ்ஏசியிடம், இனி வேலை செய்வதை எல்லாம் நிறுத்திவிடுங்கள்.

உழைத்தது எல்லாம் போதும். இனி அம்மாவை கூட்டிக்கொண்டு, எங்காவது வெளிநாடுகளுக்கு டூர் சென்று சுற்றிப்பாருங்கள். பிடித்ததை எல்லாம் செய்யுங்கள். நான் தான் சம்பாதித்கிறேனே, நீங்கள் ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள் என்று கூறினார்.


ஆனால் எஸ்ஏசி ஒத்துக்கொள்ளவில்லை. எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது. சினிமாவில் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிநாடுகளுக்கு செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறி மறுத்துவிட்டார் என்று இயக்குநர் ராஜேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement