• Jan 19 2025

பாக்கியா அனுப்பிய வாய்ஸில் மயங்கிய பழனி! குழந்தை பெற்று வீட்டுக்கு வந்த கோபி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், இனியாவும் பாக்கியாவும் பழனிச்சாமியின்  புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்க இனியா அவருக்கு கிண்டல் அடிக்கிறார். ஆனாலும் பாக்கியா அப்படி எல்லாம் சொல்ல கூடாது என சொல்ல, அப்போ நீங்க புகைப்படங்கள் நல்லா இருக்கு என்று பழனிக்கு வாய்ஸ் போடுமாறு சொல்லுகிறார். அப்பத்தான் நாளைக்கு உங்களுக்கும் நீங்க போடுற ஸ்டேட்டஸ்க்கும்  ரிப்ளை பண்ணுவாங்க என்று சொல்ல, பாக்கியாவும் பழனிக்கு நீங்க போட்டு இருக்கிற சேட்  எல்லாம் நல்லா இருக்கு என்று ரிப்ளை பண்ண, அதைக் கேட்டு பழனிச்சாமி சந்தோஷப்படுகிறார். பாக்கியா அனுப்பிய வாய்ஸை மீண்டும் மீண்டும் கேட்கிறார்.

இதையடுத்து ராதிகா கோபியிடம் என்ன முடிவு எடுத்திருக்கீங்க என்று கேட்க, கோபி சற்று யோசித்து விட்டு அபார்ஷன் பண்ணலாமா என்று கேட்க, ராதிகா அவரை போட்டு அடிக்கிறார். அதன் பிறகு நாம குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கிறார்.


நைட் தூங்கும்போது ராதிகாவும் கோபியும் குழந்தையோடு வீட்டுக்கு வருவது போலவும், செழியன் அந்த நேரத்தில் தனது குழந்தை வைத்து வீட்டில் கொஞ்சிக் கொண்டிருப்பது போலவும் கனவு காண்கிறார். மேலும் கோபிக்கு பிறந்த குழந்தை, செழியன் பிள்ளைக்கு சித்தப்பா என முறையை வைத்து கனவு காண, கனவில் ராமமூர்த்தி கோபியை திட்டுவது போலவும் கனவு கண்டு திடுக்கிட்டு எழும்புகிறார்.

மறுபக்கம் ஜெனி, செல்வி, பாக்கியா, அமிர்தா நால்வரும் கிச்சனில் சமைத்துக் கொண்டு இருக்க, நானும் ஏதாவது பண்ணுறேன் என ஜெனி வெண்டக்காய் எடுத்து வெட்டுகிறார். ஆனால் அதை வெட்ட தெரியாமல் கேள்வி மேல கேள்வி கேட்க, அதை வச்சிடு நானே வெட்டுறேன் என பாக்கியா சொல்லுகிறார்.

அந்த நேரத்தில் அங்கு ராதிகா காபி போட வர, பாக்கியா தாலிக்கும் வாசத்தில் அவருக்கு வாந்தி வருகிறது. இதை பார்த்த செல்வி, என்ன இந்த அம்மா பிள்ள தாச்சு போல தாளிக்கும் வாசத்துக்கு எல்லாம் வாந்தி எடுக்குது என்று சொல்ல, பாக்கியா யோசிக்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement