• May 18 2024

நயனை திருமணம் முடித்த ராசி: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ள முதலமைச்சர்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.இதன்பின் விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் எனும் படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

எனினும் இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி சற்று சரிவை சந்தித்த இயக்குநர் விக்கி தற்போது மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்து விட்டு பிரபல நடிகை நயன்தாராவை திருமணம் செய்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் விளம்பர படத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாத இறுதியில் மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் செஸ் ஒலிபியாட் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

மேலும் அதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இடம் பெறுவது போன்ற காட்சிகள் உள்ளன. அந்த படப்பிப்பில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு இன்று சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்று வருகிறது.

மு.க ஸ்டாலினை வைத்து விக்னேஷ் உருவாக்கும் அந்த விளம்பர திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். அத்தோடு நேப்பியர் பாலத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதால் சில மணி நேரங்கள் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் மகாபலிபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெற உள்ளது. அந்த விழாவையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement