• May 19 2024

''படு மொக்கை..பார்க்க முடியல''... ஜெயிலர் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்!!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

அண்ணாத்த படத்திற்குப் பின்னர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் வரும் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர், ரஜினிக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என இதுவரை மொத்தமே 3 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள நெல்சனுக்கும் ஜெயிலர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

முக்கியமாக அவரது இயக்கத்தில் விஜய் நடித்து கடந்தாண்டு வெளியான பீஸ்ட், மிக மோசமான தோல்வியைத் தழுவியது. அதனால், ஜெயிலரில் வெறித்தனமான சம்பவம் செய்திருப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி நடிக்க, அவருடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஜெயிலர் படத்தின் பாடல்கள் கடந்த வாரம் வெளியான நிலையில், தற்போது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. 2.15 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லர் ஆரம்பம் முதலே ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ளது. ரிட்டையர்டு லைஃப், அழகான குடும்பம் என வாழ்ந்துவரும் ரஜினி, திடீரென வில்லன்களை புலியாக பாய்ந்து வெளுத்து வாங்குகிறார். ரஜினியின் அக்மார்க் ஆக்‌ஷன் காட்சிகள் ஜெயிலரிலும் இடம்பெற்றுள்ளது என்பதை ட்ரெய்லரில் காண முடிகிறது.

அதேபோல், "ஒரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்," "ரொம்ப தூரம் போய்ட்டேன் ஃபுல்லா முடிச்சிட்டு தான் திரும்பி வர முடியும்" என பஞ்ச் டயலாக் பேசி வைப் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், "சிறப்பான தரமான சம்பவம்... சில பட்டங்களை யாராலும் எடுக்க முடியாது, அது சாதாரண மக்களால் மட்டுமே கொடுக்க முடியும் தலைவர் நிரந்தரம்" என கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், கூஸ்பம்ப் ட்ரெய்லர், தலைவர் வெறித்தனமா கம்பேக் கொடுக்கப் போகிறார் எனவும் கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர். இன்னும் சிலரோ இது நெல்சனுக்கும் சிறப்பான கம்பேக் படமாக அமையும் எனவும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஜெயிலர் ட்ரெய்லரை நெட்டிசன்கள் பலரும் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனாலும் ஜெயிலர் ட்ரெய்லருக்கு ரஜினி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பே கிடைத்துள்ளது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement