• Sep 27 2023

வருங்கால கணவருடன் ஒர்க் அவுட் பண்ணும் ரோபோ ஷங்கரின் மகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகளான இந்திரஜா சங்கர் தற்பொழுது திரையுலகில் நடிகையாக கால் பதித்து கலக்கி வருகிறார். அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பிகில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

இத்திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிதி ஷங்கரின் நண்பியாக நடிகை இந்திரஜா நடித்து அசத்தியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை இந்திரஜா ஷங்கர்  இவர்  டாக்டர் கார்த்திக் என்பவரை காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் விரைவில் நடக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இவர் தனது வருங்கால கணவருடன் இணைந்து உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கவுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement