• May 10 2024

அட குஷ்பூவின் அம்மாவா இது..? இந்த வயசிலும் இப்படி இருக்காங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் கூட்டத்தினைக் கொண்ட பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் 'வெற்றிவிழா, சின்னத்தம்பி' ஆகிய படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து ரஜினி, கமல், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்தார்.



பின்னர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். இவ்வாறாக வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்து வரும் குஷ்பூ தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'மீரா' சீரியலில் நடித்து வருகிறார்.



படங்கள், சீரியல்களில் மட்டுமல்லாது குஷ்பூ சமூக வலைத்தளங்களிலும் தனது பொழுதைக் கழித்து வருவது வழமை. சமீபத்தில் கூட உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை குஷ்பூவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.


இதனைத் தொடர்ந்து இவர் தற்போது தனது அம்மாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருவதோடு அப்புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியும் வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement