• May 07 2024

இரவுப் பார்ட்டியில் கலந்து கொண்ட த்ரிஷா... கன்னத்தில் லிப்ஸ் அடையாளம் வேற இருக்கே... வெளியான புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகியதிலிருந்து இன்று வரை முன்னணி நடிகையாகவே திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா.  எனினும் இவர் தமிழில் அறிமுகமாகியது 'ஜோடி' என்ற படத்தில் துணைக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததன் மூலமாகத்தான். அதனைத் தொடர்ந்து 'மௌனம் பேசியதே' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.



அன்று முதல் இன்றுவரை விஜய், அஜித், ஜெயம்ரவி, கமல், விக்ரம் என சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்த வண்ணமே இருக்கின்றார். இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்திருந்த '96' என்ற படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இவர் நடிப்பில் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தற்போது வெளியாக இருக்கிறது. மேலும் நடிகை த்ரிஷா அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக 'தளபதி 67' திரைப்படத்தில் நடிப்பார் எனவும் கூறப்படுகின்றது.



இந்நிலையில் நேற்று இரவு நடிகை ராதிகாவின் பிறந்தநாள் பார்ட்டி இடம்பெற்றிருக்கின்றது. இதில் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கின்றனர். அப்பார்ட்டியில் த்ரிஷாவும் பங்குபற்றியிருக்கின்றார். அங்கு த்ரிஷா ராதிகாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. 



அப்புகைப்படத்தில் த்ரிஷாவின் கன்னத்தில் உதட்டு அடையாளம் ஒன்று காணப்படுகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள்" இது யாரோட உதட்டுப் பதிவு" என்று கேட்டு அவரைக் கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement