• May 06 2024

'ஸ்ரீ நிதி சொல்வதை யாரும் நம்பாதீங்க'- நடிகை நட்சத்திராவில் காதலனான விஸ்வாவின் பரபரப்பான பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய 7c என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஸ்ரீ நிதி. இவர் இந்த சீரியலைத் தொடர்ந்து சில சீரியல்களில் நடித்திருந்தாலும் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர்.

மேலும் பல ஷோக்களில் பங்குபற்றி வந்த இவர் வலிமை திரைப்படத்தைப் பற்றி தவறாகப் பேசியதால் பல விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளானார். இதனால் மனஅழுத்தத்திற்கு உள்ளான இவர் சில காலம் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்புவைக் காதலிப்பதாகவும் அவர் வீட்டின் முன் போராட்டத்திலும் இறங்கினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதே போல தன்னுடைய சக நடிகையும் தோழியுமான நட்சத்திரா காதலிப்பவர் தவறானவர் என்றும் நட்சத்திராவின் உயிருக்கு ஆபத்து அவரைக் காப்பாற்றுங்கள் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இவ்வாறு இவர் பேசிய வீடியோ வைரலாகியதை அடுத்து இதற்கு பதில் கொடுக்கும் முகமாக நட்சத்திரா தனது தோழியான ஸ்ரீ நிதி மன அழுத்தத்தில் இருப்பதாகவும் என்னை யாரும் பிடித்து வைத்திருக்கவும் இல்லை . நான் நல்லாத் தான் இருக்கின்றேன் யாராலும் எனக்கு பிரச்சினை இல்லை என்றும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நட்சத்திராவில் காதலன் என்று சொல்லப்படுகின்ற விஸ்வாவிடம் நீங்க நட்சத்திராவை திருமணம் செய்யப் போகின்றீர்களா எனக் கேட்கப்பட்டது. அதற்கு விஸ்வா ஸ்ரீ நிதி சொல்வதை யாரும் நம்பாதீங்க எங்கட குடும்பத்தில இருக்கிறவங்க எல்லோருக்கும் நட்சத்திராவை ரொம்ப பிடிக்கும்.

நட்சத்திரா நல்லாத் தான் இருக்கிறாங்க எங்க ரெண்டு வீட்டிலையும் திருமணப் பேச்சு பற்றி தான் பேசிட்டு இருக்கிறாங்க விரைவில் நாங்கள் எங்களது திருமணம் எப்போது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிப்போம். அதற்காகத் தான் நாங்களும் காத்திருக்கின்றோம் எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement