• May 19 2024

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா இல்லையா..? கதாநாயகியாக களமிறங்கும் பிரபல நடிகை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2005-இல் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த்,பிரபு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,ஜோதிகா,நாசர் மற்றும் வடிவேலு போன்ற முன்னணி நடிகர்களுடன் உருவான திரைப்படம் சந்திரமுகி. இத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அள்ளி குவித்தது.

இந்நிலையில் சந்திரமுகி 2வது பாகத்தினை ரஜினிகாந்தின் அனுமதியுடன் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனமானது இத்திரைப்படத்தினை தயாரிக்க இருந்தபோதிலும் இப்பொழுது லைக்கா நிறுவனமானது இப்படத்தினை தயாரிக்க உள்ளது

இத்திரைப்படத்திற்கு பாகுபலி இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்க உள்ளளார். அதேவேளை முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியது.

இந்நிலையில் நடிகை ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார் அல்லது நடிகை ஜோதிகாவே மீணடும் நடிப்பாரா என்கின்ற பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.அந்தவகையில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலில் நடிகை ஜோதிகா மறுத்ததை அடுத்து இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியது. ஆனால் அதுவும் உத்தியோகபூர்வமாகவில்லை

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக ராசிகன்னா அல்லது ஆண்ட்ரியா நடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினர் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement