• May 19 2024

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஆர்..ஜே. வாக தமது பயணத்தை தொடங்கிய பாலாஜி தற்போது கதாநாயகன், இயக்குநர் என தமிழ் சினிமாவின் பன்முகத் திறமை கொண்ட கலைஞனாக முன்னேறியுள்ளார்.

என்.கே சரவணன் இயக்கத்தில், ஜீ ஸ்டூடியோ மற்றும் போனி கபூரின் பேவியோ பிராய்கட்ஸ் நிறுவனமும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள "வீட்ல விசேஷம்" என்ற புதிய படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் .ஆர்.ஜே பாலாஜி.மேலும் சத்யராஜ்.ஊர்வசி, அபர்ணா பாலமுரளி போன்றோர் நடித்துள்ளனர்.

"குழந்தை பெற்றுக்கொள்ள வயது தடையில்லை" என்ற சமூக கருத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 17 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அத்தோடு இத்திரைப்படம் 380 முதல் 400 திரையரங்குகளில் தமிழகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.அந்த காட்சியில் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை தனது மகனான R J பாலாஜியிடம் சொல்ல திணறும் கலகப்பான காட்சி ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement