• Sep 18 2024

புது பொண்டாட்டியை பொத்தி பொத்தி கூட்டிவரும் நிக்கோலாய்! வைரல் வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அவரது நீண்ட நாள் நண்பரான நிக்கோலாய் சத்தேவ் என்பவரை வரலட்சுமி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணம் தாய்லாந்தில் நடந்ததாகவும் திருமண ரிசப்ஷன் சென்னையில் பிரம்மாண்டமாக பலரும் வியக்கும் வண்ணம் இந்திய திரை உலக நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுடன் கொண்டாடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நடிகை வரலட்சுமி தனது கணவர் நிக்கோலாயுடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருந்தன.


இந்த நிலையில் தற்போது நடிகர் சரத்குமார் மற்றும் வரலட்சுமி அவருடைய காதல் கணவர் நிக்கோலாய் சத்தேவுடன் மாஸாக காரில் என்ட்ரி கொடுத்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

அதில் நிக்கோலாய் தனது காதல் மனைவி வரலட்சுமியை பொத்தி பொத்தி அழைத்து வரும் காட்சிகள் பார்ப்போர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement