• Apr 16 2025

குஷ்பூ மகள்களை இணையத்தில் கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பல படங்களை நடித்து இயக்கிய சுந்தர்சி அவர்கள் 2000 ஆம் ஆண்டு முன்னணி நடிகை குஷ்பூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அவந்திகா ,அனந்திகா எனும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். பெரும்பாலான நிகழ்வில் தங்களது பிள்ளைகளை அழைத்து வருவதை இருவரும் விரும்புவதில்லை.


இந்த நிலையில் சமீபத்தில் சுந்தர்சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் பூஜை நிகழ்வுகள் மிக பிரமாண்டமாக இடம்பெற்றது. இதில் திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்வில் சுந்தர்சி தனது குடும்பத்துடன் வருகை தந்திருந்தார்.


குறித்த நிகழ்வில் எடுத்துகொண்ட புகைப்படங்கள் வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. மேலும் அதிகமாக மீனா கலந்து சிறப்பித்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் இப்போது சுந்தர்சி தனது மகள்களுடன் வந்த வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்படுள்ளது. குறித்த பதிவின் கீழ் பலரும் இவர்கள் இருவரும் திருநங்கைகளா? என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.இது தற்போது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement