ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்த திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் இன்றைய தினம் உலக அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
1996 ஆம் ஆண்டு இந்தியன் படம் எடுக்கப்பட்டது. இதன் இரண்டாவது பாகம் தற்போது 28 ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தில் கமலஹாசன் பல வேடங்களில் நடித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தில் கமலஹாசனுடன் எஸ்.ஜே சூர்யா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்த படம் வெளியாகி தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஒரு சிலர் இந்த திரைப்படம் இந்தியன் 3 படத்திற்கான இன்ட்ரோவாக மட்டும்தான் உள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் டைலரை பார்த்து ஓவர் நம்பிக்கையில் படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. இது தொடர்பாக தற்போது மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்தியன் 2 படம் தொடர்பான எதிர்மறை விமர்சனங்களை சுட்டிக்காட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரியாக்ஷனையும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி இந்தியன் 2 திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் லால் சலாம் படம் எதிர்மறையான விமர்சனங்களில் இருந்து தப்பித்து விட்டதை நினைத்து ரியாக்ஷன் செய்வதை போலவும் இதை பகிர்ந்து உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
மேலும் ரஜினி சங்கருக்கு கை கொடுப்பதை போலவும் வடிவேல் படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். தற்போது இதற்கு ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!