• Sep 27 2023

நயன்தாரா வீட்டு குட்டி கிருஷ்ணர்கள் - எவ்வளவு கியூட்டா இருக்காங்க பாருங்க..! Happy KrishnaJayanthi!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த நயன்தாரா தனது இரு குழந்தைகளுடன் செம மாஸாக ஜெயிலர் பட பாடலுடன் ரீல்ஸ் வெளியிட்டு இருந்தார். அதன் பின்னர், அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் தான் இணைந்து நடித்த ஜவான் படத்தின் தமிழ் மற்றும் ஹிந்தி ட்ரெய்லர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு புரோமொட் செய்திருந்தார்.


மேலும், நடிகர் ஷாருக்கானுடன் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. தனது கணவர் விக்னேஷ் சிவன், ஷாருக்கான் மற்றும் ஷாருக்கானின் மகள் சுகானா கானுடன் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தார் நயன்தாரா.


இந்நிலையில், தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது உயிர் மட்டும் உலகம் பட்டு வேட்டி அணிந்து கொண்டு குட்டி கிருஷ்ணர்களாக அலங்கரிக்கப்பட்டு பூஜை அறைக்கு தவழ்ந்து செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நயன்.


அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா இணைந்து நடித்த ஜவான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தென்னிந்திய நடிகையாக இதுவரை வலம் வந்த நயன்தாரா இன்று முதல் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். அத்துடன் ஜவான் நல்ல விமர்சங்களை பெறுமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement