• Apr 28 2024

'ஜவான்' படம் எப்படி..? அட்லீ தெறிக்க விட்டாரா..? கவிழ்த்து விட்டாரா..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த திரைப்படங்களில் ஒன்று ஜவான். பிகில் படத்திற்கு பின் அட்லீ இயக்கத்தில் மாபெரும் பொருட்செல்வவில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கான் நடித்துள்ளார்.


மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஏற்கெனவே இப்படத்தினுடைய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தன. இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கு என்பது குறித்த தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் தனது பதிவில் "ஜவான் பிளாக்பஸ்டர். ஸ்டார் பவர், ஸ்டைல், பாடல்கள், பிரம்மாண்டம், சர்ப்ரைஸ் கேமியோ அனைத்தும் கலந்த ஒரு மாஸ் படம், இந்த ஆண்டில் ஷாருக்கானுக்கு இரண்டாவது பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக ஜவான் அமைந்துள்ளது. அட்லீ அண்ணா நீ ஜெயிச்சுட்ட" என குறிப்பிட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.


மற்றோர் நபர் குறிப்பிடுகையில் "ஜவான் முழுக்க முழுக்க ஷாருக்கானின் மாஸான சண்டைக் காட்சிகள் நிறைந்த ஒரு படமாக உள்ளது. அதோடு ஸ்ட்ராங் ஆன எமோஷனல் உணர்வுகள் படத்தில் உள்ளது. கண்டிப்பாக படம் ஹிட் ஆகும்" எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் ஒருவர் கூறுகையில் "ஜவான் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படம். ஷாருக்கானை படத்தில் அட்லீ காட்டியுள்ள விதம் மிகவும் கவரக்கூடிய வகையில் அருமையாக உள்ளது. பின்னணி இசை நன்றாக உள்ளது, ஜவான் மாஸ் தான்" என பதிவிட்டுள்ளார்.


இன்னொருவர் கூறுகையில் "ஜவான் படம் புது கதைக்களம் இல்லை என்றாலும் திரைக்கதையும், கதாபாத்திரங்களும் சூப்பராக உள்ளன. ஷாருக்கானுக்கு இப்படத்தின் மூலம் 1000 கோடி லோடிங். விஜய் சேதுபதி கேரியரில் இதுதான் அவருக்கு சிறந்த வில்லன் கதாபாத்திரம். அதேபோல் நயன்தாரா ரொம்பவும் அழகாக தெரிகிறார், தீபிகா படுகோனேவின் சண்டைக் காட்சிகள் சூப்பர்" எனப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.


மற்றோருவர் தனது பதிவில் "ஜவான் முதல் பாதி சூப்பர். சண்டைக் காட்சிகள் அனல் பறக்கிறது. இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கூஸ்பம்ப்ஸ் தான். ஷாருக்கானின் பிளாஷ்பேக் வேறலெவல். நயன்தாரா எண்ட்ரி, விஜய் சேதியின் நடிப்பு பங்கமாக உள்ளது. விஜய் கேமியோ இல்லை. அதே போல் எந்தபடத்தில் சாயலும் இல்லை இது தான் ஜவான் படத்தின் பிளஸ். நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகும்" என உறுதியாக சொல்லியுள்ளார்.


மேலும் "ஜவான் ஒரு அருமையான படம். கூஸ்பம்ப் காட்சிகள் நிறைந்த படமாக ஜவான் உள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்பு ஓகே, அனிருத்தின் பின்னணி இசை திரையரங்குகளை அதிரவைக்கிறது. அட்லீக்கு தரமான கம்பேக் படம். மொத்தத்தில் ஷாருக்கான் தான் பாலிவுட்டின் கிங்" என பாராட்டைப் பொழிந்துள்ளார். 


இவ்வாறாக ஜவான் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அதிகம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement