• May 07 2024

நடிகை சமந்தாவுக்கு ஸ்பெஷல் கிப்ட் ஒன்றை அனுப்பி வைத்த நயன்தாரா-அடடே சூப்பர் கிப்ட்டாக இருக்கே

stella / 6 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக விளங்குபவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா.இவர்கள் இருவரும் தற்பொழுது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் அதிகம் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்கில ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.


ஒரு பக்கம் இவர்கள் இருவருமே, போட்டி போட்டுக்கொண்டு திரையுலகில் முன்னணி நடிகைகளாக வளர்ந்தாலும்,இருவருக்கும் இடையில் நட்பும் நீடித்து வருகின்றது.இந்நிலையில் நடிகை நயன்தாரா, தன்னுடைய தோழிக்கு சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


நயன்தாரா, திரைப்படம், குடும்பம், குழந்தைகள் என ஒரு பக்கம் படு பிசியாக இருந்தாலும்... மற்றொரு புறம் பிஸ்னஸிலும் கெத்து காட்டி வருகிறார். சமீபத்தில் தான், 9ஸ்கின் என்கிற நிறுவனம் ஒன்றையும், மலேசியாவில் ஆரம்பித்து இருந்தார்.

தன்னுடைய 9ஸ்கின் நிறுவனத்தின் அழகு சாதன பொருட்களை தான் நயன்தாரா, தற்போது தன்னுடைய நெருங்கிய தோழியான சமந்தாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது சமந்தா மயோசிட்ஸ் சிகிச்சை எடுத்து வருவதோடு, மைண்டை ரிலாக்சிங்கிற்காக, பல நாடுகளுக்கு தொடர்ந்து வெகேஷன் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement