• May 08 2024

'ஜவான்' வெற்றியை கணவனுடன் இணைந்து கொண்டாடிய நயன்... மும்பையிலிருந்து வெளியான புகைப்படங்கள்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் நேற்றையதினம் வெளியாகியுள்ள திரைப்படம் ஜவான். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகுமே சிறந்த வரவேற்பைக் கொடுத்துள்ளது.


குறிப்பாக ஷாருக்கானின் பதான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் ஜவான் படம் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் ஆவல் ரசிகர்களிடம் சற்று அதிகமாகவே இருந்தது. 


அதுமட்டுமல்லாது நயன்தாரா நடித்துள்ள முதல் பாலிவுட் திரைப்படம் இது என்பதால் நயன்தாரா ரசிகர்களும் அமோக வரவேற்புக் கொடுத்திருந்தனர். இந்நிலையில் ஜவான் படமானது சிறந்த வரவேற்பை மட்டுமல்லாது முதல் நாளிலேயே நல்ல வசூலையும் பெற்று மாஸ் காட்டி இருக்கின்றது.


இந்த வெற்றியை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து மும்பையில் கொண்டாடி இருக்கிறார. இவர்கள் இருவரும் மும்பை விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement