தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் தான் அட்லீ. இவர் விஜய்யை வைத்து இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களுமே சிறந்த வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளன. இதனையடுத்து இவர் தற்பொழுது ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இப்படத்தில் நடிகை நயன்தாரா, தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அத்தோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இத் திரைப்படம் நேற்றையதினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
படம் பார்த்த பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய விமர்சனத்தைக் கூறியிருக்கின்றார். அதாவது "ஜவான் படத்தில் ஹீரோ ஜெயிலராம் ஆனால் அவரைப் பார்த்தால் ஜெயிலைக் கட்டிய ஓனர் மாதிரி தெரிகிறார், ரஜினியின் படத்தை விட்டிட்டு பேசாமல் இந்தப் படத்துக்கு ஜெயிலர் என்று பேர் வைத்திருக்கலாம்" எனக் கூறியுள்ளார்.
மேலும் "தான் ஏற்கெனவே இயக்கிய ஒவ்வொரு படத்திலிருந்தும் ஒவ்வொரு சீனைக் காப்பியடித்து அட்லீ இந்தப் படத்தை இயக்கியிருக்கின்றார், படத்தில் நயன்தாரா சாதாரணமான வுமனா, சூப்பர் வுமனா என்று கூடத் தெரியவில்லை" எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது "பொதுவாக சுமாரான மொக்கை படத்தை பார்த்தால் நாங்கள் உங்களிடம் தியேட்டருக்கு போகாதீர்கள் என்று தான் சொல்வோம். ஆனால் ஜாவான் ஒரு சூர மொக்கை படம். இருப்பினும் பரவாயில்ல நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை தியேட்டரில் சென்று பார்த்து ஹிட்டாக்கி விடுங்கள்" என்றார்.
மேலும் "அப்படி நீங்கள் அனைவரும் இணைந்து படத்தைக் ஹிட் ஆக்கினால் தான் பாலிவுட்டில் சல்மான் கான், ஆர்யன் கான்வரை படம் எடுத்துக்கொண்டு அங்கேயே சுத்தி பாலிவுட் ரசிகர்களையும் கிறுக்கு பிடிக்க வைத்துவிடுவார் அட்லீ. அப்படி இல்லையென்றால் என் அண்ணனுக்கு நான்தான்டா செய்வேன் என சொல்லிக்கொண்டு மீண்டும் தமிழுக்கு வந்துவிட்டால் நம்ம நிலைமையை யோசித்து பாருங்கள்" எனவும் கூறி ஜவான் படத்தை தாறுமாறாக கழுவி ஊற்றியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
Listen News!