நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான "வாழை" திரைப்படம் குறித்து அழகாக பேசி காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு மாரி செல்வராஜ் அவர்களும் ரிப்ளை போஸ்ட் செய்துள்ளார்.
அதில் sk நம்ம தமிழ் சினிமாவில் ரொம்ப ஸ்ட்ரோங்கான விடயத்தை திரையில் சொல்லக்கூடிய ஒருவர் மாரிசெல்வராஜ். எனக்கு இவரை கிரிக்கெட் ஆடும் போதில் இருந்தே பழக்கம். அவருக்கு நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்பது ஆசை, ஆனால் அவருடைய கதைகள் எனக்கு தெரியாது. பரியேனு பெருமாள் படம் பார்க்கும் போது என்னை பயங்கரமா சந்தோசப்படுத்தினார், ஆச்சரியப்படுத்தினார். நமக்கு தெரிஞ்ச நண்பர் அருமையான படம் எடுத்து இருக்கார் என்று நினைக்கும் போது சந்தோசமாக இருந்தது.
அதுக்கு அப்புறம் அவர் பண்ணின மாமன்னன், கர்ணன் போன்ற படங்கள் எல்லாமே அவர் எப்படி பட்ட இயக்குனர் என்பதை வெளியே காட்டித்தந்தது. வாழை திரைப்படம் அவர் வாழ்க்யில் நடந்த சம்பவத்தை படமாக எடுத்து இருக்காரு. சந்தோசத்தை காட்டுவது தாண்டி அவருக்கு நடந்த மிகப்பெரிய சோகத்தை சொல்லி இருக்காரு, எளிய மக்களுடைய வாழ்வியலை சொல்லி இருக்காரு அதுதான் இந்த படத்துக்கு அழகை இருக்கிறது. இதில் நடித்திருக்கும் முக்கிய சிறுவர்கள் ரொம்ப அருமையா நடிச்சி இருக்காங்க மற்ற நடிகர்களும் சிறப்பாகவே நடிச்சி இருக்காங்க. மாரி செல்வராஜ் மீண்டும் மீண்டும் தான் ஒரு strong-ஆன இயக்குநர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். 'வாழை‘ என்னுடைய favourite படமாக மாறியுள்ளது. பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் இந்த 'வாழை'என்று கூறியுள்ளார். இதனை பார்த்த மாரிசெல்வராஜ்
"பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள். கர்ணன் மாமன்னன் என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்து கொண்டாடி தீர்த்த வார்த்தைகளை பத்திரப்படுத்தியதை போலவே இன்று வாழைக்கு நீங்கள் இவ்வளவு ப்ரியத்தோடு தந்திருக்கும் வார்த்தைகளையும் நல்ல தோழனாக பத்திரப்படுத்திகொள்கிறேன் நன்றி சகோ என்று கூறியுள்ளார்.
பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள் …கர்ணன் மாமன்னன் என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்து கொண்டாடி தீர்த்த வார்த்தைகளை பத்திரப்படுத்தியதை போலவே இன்று வாழைக்கு நீங்கள் இவ்வளவு ப்ரியத்தோடு தந்திருக்கும்… pic.twitter.com/bhyEyzvdXB
Listen News!