• Jan 19 2025

மீனா சம்பாரிச்ச பணத்துல குடிக்க பிளான் போடும் முத்து? ஸ்ருதி சொன்ன ஷாக் நியூஸ்! கடுப்பில் விஜயா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், முத்து மீனாவுக்காக பூக்கடை வைத்திருப்பதை பார்த்து அண்ணாமலை மீனாவின் குடும்பத்தார் என எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

ரோகினி மீனா சின்ன கடையா இருந்தாலும் அதற்கு ஓனரா இருக்கா நான் பார்லர்ல சம்பளத்திற்கு வேலை செய்கிறேன் என்று தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியல என பதறுகிறார். 


அடுத்ததாக முத்து அம்மாவையும் அப்பாவையும் முன்னாடி வர சொல்ல மீனா முதல் முறையா ஒரு கடைக்கு ஓனாராக போறேன் அதுவும் உங்க பையனால நடக்க போகுது, எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்க என்று காலில் விழ இருவரும் பூ போட்டு ஆசீர்வாதம் செய்கின்றனர்.

அதன் பிறகு மீனாவின் அம்மாவிடமும் ஆசீர்வாதம் செய்ய முத்து இந்த கடையை திறந்து வைக்க போறது அம்மாவும் இல்லை அப்பாவும் இல்ல வேற ஒருத்தர் யாருன்னு யோசிங்க என்று சொல்ல எல்லோரும் தெரியாமல் குழம்ப எங்க வீட்டு கடைசி மருமக ஸ்ருதி தான் என்று சொல்ல எல்லோரும் ஷாக்காகின்றனர்.

பொதுவா ஒரு கடையை திறக்க எல்லாரும் செலிப்ரிட்டி தான் கூப்பிடுவாங்க ஸ்ருதியும் சினிமால இருக்கிறதனால அவங்களே கடையை திறந்து வச்சா ஒரு விளம்பரமா இருக்கும் என்று சொல்லி ஸ்ருதியை ரிப்பன் கட் பண்ண வைக்கிறார் முத்து. அதன் பிறகு அண்ணாமலை முதல் ஆளாக பூ வாங்குகிறார்.


அடுத்ததாக முத்து செலப்பிரிட்டி கடையை திறந்து வச்சா பணம் கொடுப்பாங்கல என்று சொல்லி ஸ்ருதிக்கு 2500 ரூபாய் பணத்தை கொடுக்க எல்லோரும் வாங்கிக்க சொல்ல சுருதியும் வாங்கிக்கொண்டு கடுப்பாக உள்ளே செல்கிறார். அதன் பிறகு விஜயா உள்ளே வர அண்ணாமலை இரு உனக்கு ஆரத்தி எடுக்கிறேன், ஊர் கண்ணெல்லாம் உன் மேல தான் இருக்கு இப்போ இன்னொரு பிசினஸுக்கு ஓனராகிட்ட என்று சொல்ல விஜயா கடுப்பாகிறார்.

விஜயா என் பேரை எதுக்கு வெச்சு ஊரெல்லாம் என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று கோபப்பட, அண்ணாமலை இதில் என்ன அவமானம் இருக்கு என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு பார்வதி விஜயாவுக்கு போன் போட்டு வாழ்த்து சொல்ல நீ வேற வெறுப்பேத்தாத என்று விஜயா கோபப்பட உனக்கு எப்படி தெரியும் என்று கேள்வி கேட்க முத்து காலையில் 4:30 மணிக்கே போன் பண்ணி சொல்லிட்டான் என்று கூறுகிறார்.


அடுத்ததாக முத்துக்கு சொந்தக்காரர்கள் எல்லோரும் தொடர்ச்சியாக போன் போட்டு வாழ்த்து சொல்ல விஜயா இன்னும் கடுப்பாகிறார். பிறகு ரூமுக்குள் ஸ்ருதி உங்க அண்ணா இதெல்லாம் நல்லவிதமா செய்யல நான் மீனாவுக்கு பணம் கொடுத்ததினால் எங்க மீனா அவருடைய பேச்சைக் கேட்காம போயிடுவாங்க ஒரு கடைய வச்சு கொடுத்து அது மூலமா வர வருமானத்தையும் வச்சு குடிக்க பிளான் போட்டு இருக்காரு. 

இனிமே பாரு கார் ஓட்டுறதை விட்டுட்டு மீனா சம்பாரிச்சு கொடுக்குற பணத்துல குடிச்சிட்டு சுத்திகிட்டு இருப்பாரு என்று சொல்ல ரவி நீ பேசாம உன்னோட வேலையை விட்டுட்டு, டப்பிங் பேசி பேசி எல்லாத்தையும் தப்பாவே பாக்குற என்று ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement