• Jan 19 2025

நடிகர் விஜய் மீது செருப்படி தாக்குதல்.. காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட புகார்! சற்றுமுன் வெளியான தகவல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் விஜயகாந்த் அண்மையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.

அதன்படி, நடிகர் விஜயும் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். அதில் மிகவும் மனம் உடைந்துபோய் கண்ணீர் விட்டு அழுதிருந்தார் விஜய்.


இவ்வாறு, விஜயகாந்தின் உடலிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்ட விஜய் கூட்ட நெரிசலில் கஷ்டப்பட்டார். இதில் எங்கிருந்தோ செருப்பு ஒன்று வந்து விஜய்யை தாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் காணப்பட்டனர்.


இந்த நிலையில், நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரம் தொடர்பில் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென்சென்னை மாவட்ட தளபதி மக்கள் இயக்கம் சார்பில் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



Advertisement

Advertisement