• Jan 25 2025

விஜய் சேதுபதி , கமல் இருவருக்கும் இடையே இதுதான் வேறுபாடு! போட்டுடைத்த முத்துக்குமரன்!

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் இடம்பெற்ற பிக்பாஸ்  சீசன் 8 டைட்டில் வின்னராக முத்துக்குமரன் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து  நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இவர் "விஜய்சேதுபதி மற்றும் அதற்கு முன்னர் நடுவராக இருந்த கமலகாசன் பற்றி பெருமையாக பேசியுள்ளார். 


முத்துக்குமரன் பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி மக்கள் மனங்களை வென்று இந்த சீசன் வெற்றியாளரானார். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் " விஜய் சேதுபதி , கமலஹாசன் அவர்கள் இருவருக்கும் இடையில் வேறுபாடு இல்லை. கமலகாசன் 7மாடிகளை கட்டிவிட்டு சென்றிருந்தார். விஜய்சேதுபதி 8வது மாடியை கட்டினார்" என்று கூறியுள்ளார்.


மேலும் "விஜய் சேதுபதி பிக்பாஸ்க்குள் இருப்பவர்களின் குணங்களை வெளிக்கொண்டு வருவதற்கு என்ன செய்யலாம் என்று அதற்கு ஏற்றவகையில் நிகழ்வை நடத்தி இருந்தார்.விஜய்சேதுபதி எனக்கு அப்பா மாதிரி  நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்து கண்டித்து இருக்கிறார்". அத்துடன் நானே ஏனைய பிக்பாஸ் கண்டெஸ்டன்களை இன்டெர்வியூ எடுத்ததாகவும் கூறியிருந்தார்.


தனக்கு பிக்பாஸ் பற்றி ஒன்றும் தெரியாது அங்கு போய் தான் தன்னை தயார் செய்ததாகவும் கூறியிருந்தார்.மேலும் பிக்பாஸிற்கும் சமூகத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார். முத்துக்குமரன் இவ்வாறு கூறியமை தற்போது வைரல் ஆகிவருகின்றது.  

Advertisement

Advertisement