• Feb 24 2025

மீனாவுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த முத்து, அவமானப்பட்டு நின்ற ஸ்ருதி, குழப்பத்தில் விஜயா- Siragadikka Aasai

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்து பார்ப்போம்.

மீனா ஸ்ருதி தன்னுடைய ஆடைகளை கழுவிக் கொடுத்ததால் பணம் தந்த விஷயத்தை முத்துவிடம் சொல்லி அழுகின்றார்.இதனால் முத்து மீனாவை சமாதானப்படுத்தி விட்டு மீனா துாங்கியதும் மீனாவின் வீட்டுக்குச் சென்று அவரின் அம்மா மற்றும் தம்பி தங்கையையும் கூட்டிக் கொண்டு பூக்கடைக்கு போகின்றார்.


பின்னர விடிந்ததும் தன்னுடைய வீட்டுக்காரர் எல்லோரையும் அழைத்துக் கொண்ட போய் வீட்டு வாசலில் மீனாவின் பூக்கடையை திறந்து வைக்கின்றார். அத்தோடு இனிமேல் மீனாவும் ஒரு பிஸ்னஸ் செய்யப்போறா, மீனா வீட்டி இருக்கிறவ இல்லை எனச் சொல்லி கடையை ஸ்ருதியின் கையால் திறந்து வைக்கின்றார்.


ஸ்ருதியும் கடையைத் திறக்க, கடைக்கு விஜயாவின் பெயர் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஸ்ருதிக்கு 2200 ரூபாய் பணத்தையும் முத்து கொடுத்து விட ஸ்ருதி முகத்தைத்திருப்பிக் கொண்டு வீட்டுக்குள் போகின்றார். அதே போல விஜயாவும் கோபத்தில் எ்ன செய்வதென்று குழப்பத்தில் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement