தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து உருவாக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் இப்போது துருவ் விக்ரமவை வைத்து ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த முதல் லுக்கில், துருவ் விக்ரம் கபடி வீரராக காட்சியளிக்கின்றார். அவரது தோற்றமும், முகபாவனைகளும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. துருவ், தனது முந்தைய படங்களில் காட்டிய மாஸான நடிப்பைத் தாண்டி இந்த படத்தில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதனை இந்த போஸ்டர் ஊடாக அறியமுடிகிறது.
முன்னர் பரியேறும் பெருமாள் , கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் அதிகளவில் சமூக நோக்கு கொண்ட கதைகளை தேர்ந்தெடுப்பவர். அந்த வகையில் ‘பைசன்’ திரைப்படம் இன்னொரு தனித்துவமான கதையமைப்புடன் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தந்தை விக்ரமின் நடிப்புக்கு இணையாக, துருவ் விக்ரமும் தனது அடையாளத்தை தமிழ் சினிமாவில் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளார். ‘ஆதித்ய வர்மா’ மற்றும் ‘மஹான்’ ஆகிய படங்களில் வித்தியாசமான தோற்றங்களை வெளிப்படுத்திய துருவ்விற்கு , இப்போது ‘பைசன்’ படம் திருப்புமுனையாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
Listen News!