• May 20 2024

அயலான் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்!

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

இன்று நேற்று நாளை என்ற வெற்றிப்படத்தை கொடுத்த ரவிக்குமாரின் இயக்கத்தில் சைன்ஸ் பிக்ஷன் படமாக உருவான அயலான் திரைப்படம் ஒரு வழியாக ஏழு வருடங்கள் கழித்து 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாக இருக்கின்றது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கின்றார்.


தமிழ் சினிமாவில் வெளியாகும் முதல் ஏலியன் திரைப்படம் அயலான் தான் எனவும் சொல்லப்படுகின்றது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது.

 
குறித்த  விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் படத்தை பற்றி பல விஷயங்களை கூறினார். மேலும் இப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் முழு படத்தையும் பார்த்ததாகவும், படம் மிகவும் அருமையாக வந்துள்ளது என படக்குழுவை ஏ.ஆர் ரஹ்மான் பாராட்டியதாகவும் , மேலும் டீசரில் இருக்கும் கிராபிக்ஸ் தரமாக இருக்கின்றது எனவும், இதே போல படம் முழுக்க கிராபிக்ஸ் தரமாக இருந்தால் இப்படம் வேற லெவெலில் இருக்கும் எனவும் ஏ.ஆர் ரஹ்மான் கூறியதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement