• Jan 19 2025

விஜயகாந்தின் சமாதியில் பித்துப் பிடித்தவர் போல உறைந்திருந்த எம்.எஸ். பாஸ்கர்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 28ம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு தமிழ் நாட்டையே உலுக்கியது.

இதை தொடர்ந்து மறைந்த விஜகாந்த்தின் சமாதிக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் தொடர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய காட்சிகள் வெளியாகி உள்ளன. 


அதன்படி, விஜயகாந்தின் சமாதிக்கு பெரிய மாலையை போட்ட எம்.எஸ். பாஸ்கர், அப்படியேஅவர் சமாதியில் விழுந்து வணங்கி அஞ்சலி செலுத்தினார். 

இதை தொடர்ந்து சில நிமிடங்கள் பித்துப் பிடித்தவர் போல அமைதியாக உறைந்து உட்கார்ந்துக் கொண்டு இருந்த பாஸ்கர், கண்கலங்கியபடியே  விஜயகாந்த் பற்றிய நினைவுகளை எண்ணிப்பார்த்து அவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்துவிட்டு சென்றுள்ளார்.

 

Advertisement

Advertisement