• Sep 21 2024

மீண்டும் சீரியலில் ரி என்ட் ரி கொடுக்கவுள்ள திருமதி செல்வம் சீரியல் நடிகை- அட இவரா? செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர்களா் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக சீரியல்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் ரசிகர்களைக் கவரும் விதமக பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக சீரியல்களை ஒளிபரப்பாக்குவதில் சன்டிவி முதலிடம் வகிக்கின்றது.

இவ்வாறு கடந்த 2007ம் ஆண்டிலிருந்து சன்டிவியில் 2013 ஆண்டு வரை ஒளிப்பரப்பான மெகா தொடர் தான் திருமதி செல்வம். இந்த சீரியலில் சஞ்சீவ் மற்றும் அபிதா ஆகியார் கதாநாயகன் கதாாயகியாக நடித்து வந்தனர்.

எளிமையான கதை களத்துடன் நடுத்தர மக்களின் வாழ்க்கை பிரதிபலிக்கும் இந்த தொடரினை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடினார்கள். அத்தோடு இதில் நடித்த ஒவ்வொருவருக்கும் தனி ரசிகர் பட்டாளமும் உருவானது,

https://twitter.com/ZeeTamil/status/1543444420615438337

மேலும் கதாநாயகி அபிதா திருமதி செல்வம் தொடருக்கு பின் வேறு எந்த ஒரு தொடரிலும் நடிக்கவில்லை. ஆனால் தற்போது அவர் மீண்டும் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

அதாவது பிரபல ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகவுள்ள மாரி என்ற புதிய தொடரில் அபிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இது குறித்த ப்ரோமோ வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement