இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரில் பங்கேற்ற பின், சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் தமிழ்நாடு எம்.பி. கமல்ஹாசன், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது அனுபவத்தையும், எண்ணங்களையும் பகிர்ந்தார்.
அதன்போது, “நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பை முக்கிய கடமையாக கருதுகிறேன். வெளியில் இருந்து கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்த இடத்தை, உள்ளே இருந்து பார்த்தேன்... அங்கு இருக்கும் கடமை, பெருமை புரிகிறது. என்னுடைய முனைப்பு நாடு முதல்ல, அப்புறம் தமிழ்நாடு.” என்றார் கமல்ஹாசன்.
முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து, ஒரு மக்களவை உறுப்பினராக பணியாற்றும் அனுபவத்தை பார்த்த பிறகு, கமல்ஹாசன் அளித்த இந்தக் கருத்துகள் அரசியல் பரப்பில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.
Listen News!