• Jul 04 2024

’மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயனை கழட்டிவிட்ட ஆர்ஜே பாலாஜி.. டைட்டில் இதுதானா?

Sivalingam / 2 weeks ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படம் வசூல் அளவிலும் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக கசிந்து வரும் நிலையில் இரண்டாம் பாகத்தில் நயன்தாராவுக்கு பதில் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் த்ரிஷா அம்மன் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்பட்டாலும் இந்த படத்தின் கதைக்கும் ’மூக்குத்தி அம்மன்’ படத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் இரண்டும் அம்மன் படம் என்பது மட்டுமே ஒரே ஒற்றுமை என்றும் ஆர்ஜே பாலாஜி தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ’மாசாணி அம்மன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் த்ரிஷாவுக்கு அம்மன் கெட்டப் போட்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படம் திருப்தியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை ’மூக்குத்தி அம்மன்’ படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவில்லை என்றும் வேறொரு முன்னணி நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்த நயன்தாராவை ’மாசாணி அம்மன்’ படத்தில் ஏன் நடிக்க வைக்கவில்லை என்ற கேள்வி எழுந்து உள்ள நிலையில் இது குறித்து விரைவில் ஆர்ஜே பாலாஜி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement