• Jan 19 2025

அஜித்துக்கு டை ஒத்து வராது.. ஏதேதோ ட்ரை பண்ணி பாத்தாச்சு..! பிரபலம் சொன்ன உண்மை

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் திரையுலகில் நடிகர் அஜித் தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். இவர் தற்போது தனக்கேற்ற கதைகளை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

தமிழ்த் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் அஜீத், நடிக்கும் திரைப்படங்கள் பெருமளவில் வெற்றி பெற்றாலும் சில சமயங்களில் தோல்வியையும் தழுவி உள்ளன.

தற்போது அஜித் விடாமுயற்சி படத்திலும், குட் பேட் அக்லி  படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இதற்கான பட பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் அஜித் தலைக்கு டை அடித்தால் அலர்ஜி என பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் தெரிவித்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், அஜித்துக்கு டை அடிச்சா ஒத்துக்கொள்ளாது. வீரம் படத்தில் அப்படித்தான் அப்ளை பண்ணனும் என்று இருந்தாங்க. ஆனா அது எதுவுமே அவருக்கு ஒத்துவரைல. கடைசில வெளிநாட்டிலிருந்து எல்லாம் டை  கொண்டு வந்தாங்க. அதுவும் அவருக்கு ஒர்க் அவுட் ஆகல. சரி அப்படியே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு சிவா வந்தாரு. அதையெல்லாம் தாண்டி என்னை அறிந்தால் படத்துக்கு ஏதேதோ முயற்சி பண்ணி பார்த்தாரு. ஆனால் அவருடைய உடல்நிலை அதற்கு சரியாக ஒத்துக் கொள்ளவில்லை என்று அந்தணன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement