• Jul 03 2024

தங்கலான் படம் பற்றி புகழ்ந்து தள்ளிய ஜிவி பிரகாஷ்.. என்ன எல்லாம் சொல்லி இருக்கார் பாருங்க?

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விக்ரம் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக இருந்தது. இதை தொடர்ந்து ஒரு தனி ஹீரோவாக தன்னுடைய வெற்றி படத்தை கொடுக்க மிகவும் போராடி வருகிறார் விக்ரம்.

தங்கலான் படத்திற்காக காடு, மலை, வெயில், எலும்பு முறிவு, வேதனை, வலி என பல கஷ்டங்களையும் தாங்கியுள்ளார். இந்த படம் கேஜிஎப் படப்பாணியில்  தங்கம் எடுக்கும் தொழிலார்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

தங்கலால் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.  இந்த படம் விக்ரமுக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுக்கும் எனவும் சிலர் சொல்லி வருகின்றனர்.


இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் தங்கலான் படம் பற்றி தனது எக்ஸ் தல பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், தங்கலான் படத்தின் பின்னணி இசைப்பணிகள் முடிந்துவிட்டன. இந்த படத்தின் பின்னணி இசையை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக போட்டுள்ளேன். இது என்ன ஒரு திரைப்படம். இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றேன். அதுமட்டுமின்றி பிரமிக்க வைக்கும் டெய்லர் மிக விரைவில் வெளியாக உள்ளது. அதை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தங்கலான் திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு பெருமைக்குரிய படம் எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement