• Jul 21 2026

இன்னும் 4 நாட்களில் 1000 கோடியை தட்டி தூக்கும்..! பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனை தெறிக்கவிடும் கல்கி?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் மட்டுமே 100 கோடியை வசூலை ஈட்டியது. அதன் பின்பு மகாராஜா திரைப்படம் 100 கோடியை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 85 கோடி வசூலுடன் காணப்பட்டது. கருடன் திரைப்படமும் அதேபோலத்தான்.

தமிழ் சினிமா 100 கோடியை நெருங்குவதற்கு திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், தெலுங்கு சினிமாவில் ஆயிரம் கோடிகளையும் அசால்டாக அடித்து விட்டு சென்றுள்ளது. 


அந்த வகையில் தற்போது கல்கி 28 98 ஏடி திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நான்கு நாட்களிலேயே 500 கோடி ரூபாய் வசூலை அள்ளி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி கல்கி 28 98 ஏடி திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளதாக இதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை பிரபாஸீன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement