• Jan 19 2025

கமலாவுக்கு அடிக்க கை ஓங்கிய கோபி... அலறியடித்து ஓடிய எழில், செழியன்!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா சாவித்திரியை அழைத்து வந்து ஈஸ்வரிக்கு சப்ரைஸ் கொடுக்க, அவர் கல்யாணத்தில் ஈஸ்வரி செய்த கலாட்டா எல்லாவற்றையும்  சொல்லி கிண்டல் அடிக்கின்றார். இதனால் ஈஸ்வரி சற்று சந்தோஷமாக காணப்படுகின்றார்.

இன்னொரு பக்கம் செழியன் டீ கேட்டு  கீழே வர, செல்வி வேலையாக இருப்பதால் நான் போட்டு தருகிறேன் என்று ஜெனி சொல்கின்றார். அதில் சக்கரையும்  டீ தூளும் அளவில்லாமல் அள்ளிப் போட்டு விடுகிறார். அந்த நேரத்தில் எழிலும் அங்கு வர இருவரும் டீ குடித்துவிட்டு அதிர்ச்சி அடைகின்றார்கள்.

இதன்போது உங்களுக்கும் சமையலுக்கும் சுத்தமா செட்டாகாது தயவு செய்து இந்த மாதிரி எல்லாம் செய்யாதீங்க என்று எழில் சொல்ல, நான் திரும்பவும் டீ போட்டு வருகிறேன் என்று ஜெனி கிளம்ப ஆளாளுக்கு ஒரு திசையில் அலறி அடித்து ஓடி விடுகிறார்கள்.


மறுநாள் கோபி தூக்கத்தில் இருந்து எழுந்ததும் ராதிகா நைட் ஏன்  அம்மாவை மரியாதை இல்லாம பேசுனிங்க என்று கேட்க, உங்க அம்மா தான் மரியாதை இல்லாம கதைத்திருப்பாங்க என்று கோபி சொல்லுகிறார். அங்கு வந்த கமலாவும் ஈஸ்வரி பற்றி தப்பு தப்பாக பேச கோபி கோவப்படுகின்றார். மேலும் தான் இப்படித்தான் பேசுவேன் என்று சொல்ல, இனிமே ஒரு வார்த்தை பேசினீங்க அவ்வளவுதான் என கமலாவுக்கு அடிக்க கை ஓங்குகிறார் கோபி.

இதனால் கோபியின் சட்டையை பிடித்து என்ன பண்ணுறீங்க? எங்க அம்மா கிட்ட மன்னிப்பு கேளுங்க என்று ராதிகா கோபப்பட, மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லுகிறார் கோபி. அதன் பின்பு கிச்சனிலும் அதே டென்ஷனில் அங்கு இருப்பவர்களிடம் சத்தம் போடுகிறார்.

இறுதியாக கோபியின் நண்பர் கிச்சனுக்கு வர அங்கு கோபி டென்ஷன் ஆக இருப்பதை பார்த்து கூல் செய்கிறார். மேலும் வேலை செய்றவங்க கிட்ட இப்படி சத்தம் போடாதே. அவங்க கிளம்பி போயிட்டா உனக்கு தான் கஷ்டம் என்று அட்வைஸ் கொடுக்கிறார். அத்துடன் நேற்று பார்ரில் நடந்த விஷயத்தை சொல்ல, கோபி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement