• Jul 14 2026

கில்லி போல சொல்லியடிக்கும் பிரபாஸின் கல்கி படம்... அதிகார்வப் பூர்வமாக வெளியான கலெக்சன்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பான் இந்தியா நடிகரான பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கல்கி 28 98 ஏடி. இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இதில் பிரபல நட்சத்திரங்களான அமிர்தா பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன், பசுபதி, திஷா பதானி மற்றும் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், மிருனாள் தாகூர் ஆகிய மிகப்பெரிய பட்டாளமே நடித்துள்ளது.

இந்த திரைப்படம் வரலாற்று புராணக் கதையுடன் டெக்னாலஜியை இணைத்து  பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் புஜ்ஜி என்ற காரும் முக்கிய பங்காற்றி உள்ளது. அதற்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்து இருந்தார்.


இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் முதல் பாகம் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி தியேட்டருக்கு வந்தது. முதல் நாளே இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 191 கோடி வசூலை வாரி குவித்தது.

இந்த நிலையில், தற்போது கல்கி 28 98 ஏடி திரைப்படம் 4 நாட்களில் 555 கோடி வசூலித்து உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி உள்ளன. இந்த படம் இன்னும் ஒரு சில தினங்களிலேயே ஆயிரம் கோடி ரூபாயை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement