• Jan 18 2025

விஜய்யும் இல்லை, ஜெயம் ரவியும் இல்லை.. த்ரிஷாவின் கணவர் அஜித் தான்.. பிரபலம் அளித்த பேட்டி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களாக த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவுக்கு த்ரிஷா தான் காரணம் என்றும் வதந்திகள் மிக வேகமாக பரவி வருகின்றன. அதேபோல் விஜய் உடன் த்ரிஷா நெருக்கமாக இருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் மனசாட்சியே இல்லாமல் பலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

ஆனால் இந்த வதந்திகளுக்கு பதில் சொல்லாமல் தன்னுடைய வேலையை மட்டும் த்ரிஷா கவனமுடன் பார்த்து வரும் நிலையில் தற்போது அஜித்துக்கு ஜோடியாக அவர் நடித்து வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் அஜித்தின் மனைவியாக அவர் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பேட்டி அளித்த அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் அஜித், த்ரிஷா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர் என்றும் இருவருக்கும் சில அருமையான காட்சிகள் இந்த படத்தில் உள்ளது என்றும் அவை ரசிகர்களுக்கு மிகவும் புதுமையானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை அல்லது நாளை மறுநாள் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷா கலந்து கொள்வார் என்றும் அஜித்,  த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா ஆகியவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement