• Apr 15 2026

பூகம்ப டாஸ்க்கில் படுதோல்வி... புதிய வைல்ட் கார்ட் வரவுகள் நிச்சயம்..! ஆட்டம் மீண்டும் சூடுபிடிக்குமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். 

தற்போது, பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெற்றால் உள்ளே உள்ள 14 பேரும் போட்டியை தொடரலாம் இல்லை என்றால் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் மூவருக்கு இடம் விட்டு விலக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்கை விடாமுயற்சியுடன் விளையாடி வருகின்றனர். இதன் இடையே, மோதல், காதல், போட்டி, பொறாமை, என பல திருப்பங்களும், அடுத்தவரை கவிழ்க்க போடப்படும் திட்டங்களும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு தெரியாமல் இல்லை.


பிக்பாஸ் சீசன் 7ன் இந்த வாரம் வைக்கப்பட்ட பூகம்ப டாஸ்க் இறுதியாக முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து வைக்கப்பட்ட 3 டாஸ்கில் இரண்டில் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், ஒரே ஒரு போட்டியில் விஷ்ணு மற்றும் ஜோவிகா இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.


இந்நிலையில், இவர்கள் தோற்ற இரண்டு போட்டியால் 2 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வர இருக்கிறார்கள். அதன் மேலும் இந்த வார எலிமினேஷன் சேர்த்து மூன்று போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement