சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மனோஜ் தனக்கும் அம்மாவுக்கும் பிரச்சனையா மூட்டிவிட்டு நீங்க எல்லாரும் சந்தோசமா இருக்கோணும் அதுதானே உங்கட பிளான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட முத்து சில பேரோட புத்தி எல்லாம் மாறவே மாறாது என்கிறார். மேலும் ரவி, நீங்க ஒன்னும் யாருக்காகவும் பாவ புண்ணியம் எல்லாம் பாக்க வேணாம் என்று சொல்லுறார். அதுக்கு ஸ்ருதி கொஞ்சம் ரோகிணியப் பற்றி ஜோசியுங்க என்று சொல்லுறார்.
அதனை அடுத்து டேய் படிச்ச முட்டாளே நீ எல்லாம் திருந்தவே மாட்ட என்று சொல்லுறார் முத்து. மேலும் ரவி ஸ்ருதியப் பாத்து இவனை எல்லாம் கூப்பிட்டுக் கதைச்சது எங்கட பிழை என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து முத்து மீனாவப் பாத்து தனக்கு ஒரு ஐடியா தோனியிருக்கு என்கிறார். மறுநாள் முத்து எல்லாருக்கும் முன்னால மீனாவ ஏடிஎம் கார்ட்டை கொண்டு வரச்சொல்லிச் சொல்லுறார்.
அதைக் கேட்ட மீனா ஏன் கேக்குறீங்க என்ன காரணம் என்கிறார். இதைத் தொடர்ந்து ஏடிஎம் கார்ட்டை அம்மாட கொடுக்கச் சொல்லிச் சொல்லுறார். மேலும் பார்லர் அம்மாவோட கார்ட் அம்மா கையுக்கு போய்ட்டு என்று அண்ணாமலையைப் பாத்துச் சொல்லுறார். அதைக் கேட்ட அண்ணாமலை இதுமாதிரி எல்லாம் பண்ணாத இது ரொம்பவே தப்பு என்கிறார்.
அதைத் தொடர்ந்து அம்மா செய்தது ஒன்னும் தப்பில்ல என்று சொல்லுறார். பின் ரோகிணியும் விஜயா செய்தது தான் சரி என்றதுடன் என்னோட பணம் இனி ஆன்டியோட பணம் என்கிறார். மேலும் தனக்காக யாரும் சப்போர்ட் பண்ண வேணாம் என்று சொல்லுறார். இதனை அடுத்து மீனா 3 பேரை பைக்கில ஏத்தினத்துக்கு பொலிஸிட்ட மாட்டுப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!