சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா அண்ணாமலையப் பாத்து அண்டைக்கு வந்த மண்டப ஓடருக்கு பணம் கட்டப்போறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட அண்ணாமலை ரொம்ப சந்தோசம் உன்ர மனசுக்கு எல்லாமே நல்லாத் தான் நடக்கும் என்று மீனாவப் பாத்துச் சொல்லுறார். அதை அடுத்து விஜயா அந்தப் பணத்த மீனா எப்படி ரெடி பண்ணியிருப்பாள் என்று யோசிக்கிறார்.
இதனை அடுத்து சிந்தாமணி அந்த மண்டப ஓனரிட்ட மீனா எல்லாம் அவளா பணத்த கொண்டுவந்து கட்டமாட்டாள் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஓனர் கொஞ்சம் பொறுங்க அவங்க வாறாங்களா என்று பார்ப்போம் என்கிறார். அதைத் தொடர்ந்து விஜயா சிந்தாமணிக்கு போன் எடுத்து மீனா பணத்த ரெடி பண்ணிட்டாள் என்று சொல்லுறார். அதைக் கேட்ட சிந்தாமணி ஷாக் ஆகுறார்.
பின் சிந்தாமணி, மீனா பணத்தோட மண்டபத்துக்கு வரக்கூடாது என்று ரவுடிகளுக்குச் சொல்லுறார். அவங்களும் மீனாவோட பணத்த பறிக்கிறத்துக்காக ஆட்டோவப் பின் தொடர்ந்து போகிறார்கள். அதைத் தொடர்ந்து அந்த ரவுடி மீனான்ர பணத்தப் பறிச்சிட்டுப் போறார். அதைப் பார்த்த மீனா அழுதுகொண்டே அந்த ரவுடிய பின் தொடர்ந்து சென்று கீழே விழுகிறார்.
இதனை அடுத்து அந்த ரவுடிகள் மீனான்ர பணத்த வாங்கிட்டோம் என்று சிந்தாமணிக்குச் சொல்லுறார். அதைக் கேட்ட சிந்தாமணி சந்தோசப்படுறார். இதனை அடுத்து மீனாவுக்கு அடிபட்டதை அறிந்த முத்து உடனே ஹாஸ்பிடலுக்குப் போறார். அங்க மீனாவப் பார்த்த முத்து எதுக்கும் கவலைப்படாத என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!