பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிரோட அக்கா இண்டைக்கு திறப்பு விழாவுக்கு மட்டும் அப்பா வரல என்றால் நான் அவர் கூட பேசவே மாட்டேன் என்கிறார். மேலும், மீனாவும் மாமா கட்டாயம் வரணும் என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோமதி இதைப்போய் அவர் கிட்ட யாரு சொல்லுறது என்கிறார். இதனை அடுத்து மீனாவோட அம்மாவும் அப்பாவும் திறப்பு விழாவிற்கு வந்து நிக்கிறார்கள்.
அந்த நேரம் பார்த்து மயில் டீ கொண்டுவாறதைப் பார்த்த மயிலோட அம்மா இவள் இங்கயும் வேலை தான் பாத்துக் கொண்டிருக்காள் என கோபப்படுறார். இதனை அடுத்து ராஜி தங்கட வீட்ட இருந்து யாருமே வரல என்று நினைத்துக் கவலைப்படுறார். அதை பார்த்த கதிர் நீ ஒன்னும் கவலைப்படாத உன்ட அப்பா அம்மாவும் கண்டிப்பா ஒருநாள் வருவாங்க என்று சொல்லுறார்.
அதைத் தொடர்ந்து பாண்டியன் அங்க வந்து நிக்கிறதைப் பார்த்த எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். பின் கதிர் ட்ராவெல்ஸோட பெயரை எல்லாருக்கும் காட்டுறார். அதில பாண்டியனோட பெயர் இருக்கிறதைப் பார்த்த உடனே அவர் அதிர்ச்சியோட சேர்த்து சந்தோஷமும் படுறார்.
இதனைத் தொடர்ந்து பாண்டியன் கதிரைப் பார்த்து நல்ல படியா வருவ என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். அதைப் பார்த்த கோமதி கதிர் கிட்ட உங்க அப்பா ரொம்ப சந்தோசமா இருக்கிறார் என நெகிழ்ச்சியுடன் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!