• May 09 2024

அஜித் 61 படத்திலிருந்து கிடைத்த மாஸ் அப்டேட்- இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் ஆரம்பம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது 61 வது படத்தை எச். வினோத் இயக்கி வருவதோடு போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H.வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் அசுரன் பட நாயகி மஞ்சி வாரியர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது வங்கி போன்ற செட் அமைக்கப்பட்டு முதல் கட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இப்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள தொழிற்சாலையில் இப்போது படத்தின் காட்சிகளை வினோத் படமாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/embed/A1sU15cHeCw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement