• May 09 2024

விடுதலை படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியாகிய புகைப்படங்கள்-கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றதாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கிய முக்கிய இயக்குநர் தான் வெற்றிமாறன். இவர் நடிகர் தனுஷை வைத்து இயக்கிய பொல்லாதவன் ,வட சென்னை, ஆடுகளம், அசுரன் ஆகிய திரைப்படங்கள் தேசிய விருதினையும் பெற்றிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்னும் திரைப்படத்தை இயக்கவுள்ளார். அதற்கான அறிவுப்புகளும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் இவர் தற்பொழுது இயக்கி வரும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடித்து வருவதோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார்.

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் தற்போது பெரிய கிராமத்தில் செட் போடப்பட்டு அங்கு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. மேலும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்பதால் அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது படப்பிடிப்புத் தளத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/A1sU15cHeCw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement