• May 09 2024

ஏ.ஆர்.முருகதாஸின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் குக்வித் கோமாளி புகழ்- தளபதி விஜய் கழட்டி விட்டது தான் காரணமாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியாகிய ஹிட் திரைப்படங்களில் ஒன்று தான் தீனா. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் ஏ.ஆர்.முருகதாஸ். இதனைத் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து ரமணா என்ற படத்தையும் சூர்யா நடித்த கஜினி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார்.

அதே போல தளபதி விஜய்யை வைத்து கத்தி ,சர்க்கார், போன்ற படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் என்ற படம் எதிர் பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை .

இதைத்தொடர்ந்து விஜய் 65 படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகினார் . இப் படத்தின் கதையில் முழுமையான விருப்பம் இல்லாத காரணத்தினால் இப் படத்தில் இருந்து விஜய் விலகிதால் இப்படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

நீண்ட கால இடைவெளிக்கு பின்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 1947 ஆகஸ்ட் 16 என்ற படத்தை இயக்கியிருக்கின்றார். இதில் ஹீரோவாக கெளதம் மேனன் நடித்துள்ளார் .அதே போல குக்வித் கோமாளி புகழ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார்களாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/embed/A1sU15cHeCw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement