• Sep 21 2024

இரண்டு நாளில் விக்ரம் பட செய்த மாஸ் வசூல் விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

படம் ஒன்று வெளியாகினாலே முதலில் பார்ப்பது வசூலை தான். அந்தவகையில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் நேற்று முன்தினம் விக்ரம் திரைப்படம் வெளியாகியது. ரசிகர்களும் படத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் சூர்யா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். 4 வருடங்களின் பின்னர் ஆண்டவரை திரையில் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில் தமிழ் சினிமாவை எந்த படம் வந்து காப்பாற்றும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.kGF, RRR என பக்கத்து மாநில ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.

அந்த நேரத்தில் தமிழக ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது படம் தான் விக்ரம்.

இப்படம் தமிழகத்தில் இரண்டு நாட்களில் ரூ 43 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். அதுவும் இரண்டாவது நாள் வசூலில் இதுவரை வந்த படங்களின் இரண்டாவது நாள் வசூலை விட விக்ரம் தான் அதிகமாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement