• Aug 28 2025

ஶ்ரீகாந்த் கைது..! நீதிமன்றத்தில் நடந்தது என்ன? பின்னணியில் பல சினிமா பிரபலங்கள்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

90 களில் மிகவும் பிரபலம் வாய்ந்த நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகின்றார். இந்த நிலையில் இன்று இவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரது வீட்டில் போலீசார் 1kg போதைப்பொருளையும் பயன்படுத்தி வீசிய பைக்கெட் ஒன்றினையும் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.


மேலும் இவருக்கு பின்னணியில் பிரசாத் எனும் நபர் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பிரசாத்திற்கு ஸ்ரீகாந்த் பல லட்ஷம் தொகைகளை அனுப்பிய ஆதாரங்கள் சிக்கியுள்ளது. மேலும் இவர் தான் மாத்திரம் தான் போதைபொருள் பயன்படுத்தினேன் வேறு யாருக்கும் விற்பனை செய்யவில்லை என உறுதியாக கூறியுள்ளார். 


இந்த நிலையில் நீதிமன்றம் இவருக்கு ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு தீர்ப்பு வழங்கியுள்ளதுடன் யாமின் வழங்க மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் பின்னணியில் பல சினிமா பிரபலங்கள் இருப்பதாகவும் கழுகு பட நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவும் இந்த வழக்கில் சிக்கியுள்ளதாகவும் அவர் தலைமறைவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதைவிட இன்னும் ஒரு சில சினிமா பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement