• May 20 2024

கூல் சுரேஷிற்காக மன்னிப்புக் கேட்ட மன்சூர் அலிகான்- மேடையில் நடந்த சம்பவம்- கடுப்பாகிய தொகுப்பாளினி

stella / 7 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 90களில் பயங்கர வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானவர் தான் மன்சூர் அலிகான். இவர் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.இந்தப் படத்தில் விஜயகாந்திற்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு சூப்பராக நடித்திருந்தார். சண்டைக் காட்சிகளிலும் சரி வசனத்திலும் சரி சூப்பராக தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனால் தொடர்ந்து இவருக்க படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தனநடித்த எல்லாப் படங்களிலும் வில்லனாகவே அதுவும் முரட்டு வில்லனாகவே நடித்து பார்க்கும் ரசிகர்களை கொலை நடுங்க வைத்தார். இந்த நிலையில் சமீபகாலமாக மன்சூர் அலிகான் குணச்சித்திர வேடங்கள் , நகைச்சுவை காட்சிகள் என எல்லா பரிணாமங்களிலும் நடித்து வருகின்றார்.


இவரது தயாரிப்பில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் சரக்கு, இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு திரைப்பிரபலங்கள் சில பேர் கலந்து கொண்டு மன்சூர் அலிகானை வாழ்த்தினார்கள். அப்போது வழக்கம் போல எல்லா மேடைகளிலும் வந்து கடுப்பினை ஏற்படுத்தும் கூல் சுரேஷும் இந்த விழாவிற்கு வந்தார்.

மேடையில் மாலையோடு வந்த கூல் சுரேஷ் மன்சூர் அலிகானை பார்த்து ‘அண்ணன் மேல் எனக்கு சின்ன வருத்தம் இருக்கிறது. எல்லாருக்கும் மாலை போட்டு வரவேற்கும் நீங்கள் ஒருத்தருக்கு மட்டும் மாலை போட மறந்துவிட்டீர்கள் என்று சொல்லி அருகில் இருந்த தொகுப்பாளினி மீது ஆளுயர  மாலையை போட்டுவிட்டார்’.


அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக நடந்த இந்த நிகழ்வால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த தொகுப்பாளினியும்  மிகுந்த கோபத்தில் இருந்தார். மேலும் விழாவிற்கு நன்றியுரை பேச வந்த மன்சூர் அலிகானிடம் மேடையின் கீழ் இருந்தவர்கள் இப்படி ஒரு பெண் மீது அநாகரீகமாக நடந்து கொள்கிறாரே? அவரை கண்டிக்க மாட்டீர்களா? என்ற குரல் எழும்பியது.உடனே மன்சூர் அலிகான் கூல் சுரேஷுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லி கூல் சுரேஷையும் வந்து அந்த தொகுப்பாளினியிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். மேலும் இந்த மாதிரி நடந்திருக்க கூடாது என்றும் கூல் சுரேஷ் எனக்கு தம்பி மாதிரிதான். இருந்தாலும் அவன் இப்படியெல்லாம் செய்திருக்க கூடாது என்றும் நானும் கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்கவில்லை என்றும் மன்சூர் அலிகான் வேதனையில் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement