• Apr 03 2025

விஜயாவை வெளுத்து வாங்கிய பாட்டி..! ரோகிணிக்கு சப்போர்ட் பண்ணும் மனோஜ்..!

subiththira / 23 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா அந்தப் பூக்கட்டுறவ முன்னாடி அசிங்கப்பட்டது தான் எனக்கு ரொம்பவே கவலையாக இருக்கு எனப் பார்வதிக்குச் சொல்லுறார். அதுக்கு பார்வதி விஜயா நீ ரோகிணியை நினைச்ச அளவுக்கு மீனாவயும் மருமகளா நினைச்சிருந்தா எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது என்று சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா பார்வதி மீது ரொம்பவே கோபம் கொள்ளுறார். இதைத் தொடர்ந்து அண்ணாமலை விஜயாவுக்குப் போன் எடுக்கிறார்.

அதுக்கு விஜயா என்ன விஷயம் சொல்லுங்க என்று கேக்கிறார். இதைக் கேட்ட அண்ணாமலை அம்மா ஊரில இருந்து வந்திருக்காங்க என்று சொல்லுறார். மேலும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை நிறைய இருக்கு அதுதான் கூட்டிக் கொண்டு வந்தேன் என்கிறார். இதைக் கேட்ட விஜயா ரோகிணி விஷயத்தில நான் என்ன பண்ணாலும் உங்க அம்மா ஒன்னும் கேக்கக் கூடாது என்று சொல்லுறார்.

மேலும் எங்கட வீட்டில ஏதாவது நடந்தாப் போதும் உடனே முதலாவது ஆளா கிளம்பி வந்துருவாங்க என்று கோபமாச் சொல்லுறார். இதனை அடுத்து பாட்டி, விஜயா வாறாளோ என்று கேக்கிறார். பின் விஜயாவும் ரோகிணியும் ஒரே நேரத்தில வீட்டுக்கு வந்து இறங்குறார்கள். வரும் போதே விஜயா கோபமா வாறதப் பாத்து ரோகிணி அமைதியா நிக்கிறார்.

இதைத் தொடர்ந்து ரெண்டு பேரும் ஒண்ணா வாறதப் பாத்து வீட்டில இருக்கிற எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். அதைப் பாத்த முத்து பாட்டி உனக்கு வேலை இல்ல போலயே என்று சொல்லுறார். அதுக்கு விஜயா அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லுறார். இதனை அடுத்து பாட்டி விஜயாவ பேசிக்கொண்டிருக்கிறார். இறுதியில் ரோகிணிய அடிக்கிறதப் பாத்து மனோஜ் அவளுக்கு அடிக்க வேணாம் என்று சொல்லுறார். மேலும் தனக்கு ஏற்கனவே எந்த விஷயம் எல்லாம் தெரியும் என்றும் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement