பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் நடிக்கும் "Kingston" திரைப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மற்றும் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல் பிரகாஷ் எழுதி இயக்கி வரும் இந்த படத்தின் கடலுக்குள் பேய் இருக்கிறதா என அட்டகாசமாக வெளியாகிய இந்த படத்தின் teaser ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மேலும் அதிகரித்து. தொடர்ந்து ஜி.வி பிரகாஷ்குமார் இசையில் வெளியாகிய இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி வைரலாகியது.

இந்த நிலையில் இப் படத்தின் இரண்டாவது பாடல் "மண்டை பத்ரம் " எனும் சரவெடி பாடலாக வெளியாகியுள்ளது.இந்த பாடலில் ஜி.வி செம மாஸாக நடனமாடி கலக்கியுள்ளார். இப்பொழுது "Kingston" திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து வருகின்றது.வீடியோ இதோ..
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!